வியாழன், 29 மே, 2014

                                   கோடை தரும் கொடை

சுள்ளென்ற வெய்யிலில் சொக்கும் பதநீரும்
வெள்ளரிப் பிஞ்சிளநீர் நுங்குடன் - தெள்ளியநீர்
ஓடைதர் பூசணியும் ஒப்பிலா மாபலாவும்
கோடை தருமே கொடை !

(எழுதியது 11.3.2014 மாலை 7.10; வெளியானது 'உரத்தசிந்தனை" ஏப்ரல் 2014)
                         பிள்ளையார் துதி

நாகுபதி யின் துணைவி நாரா யணன்தங்கை
மேகமலை யான்மகளின் மேல்மைந்த - ஆகுபதி
உன்புகழைப் பாடாமல் ஓடியதென் காலமினி
என்நெஞ்சில் என்றும் இரும்.

(எழுதியது 21.1.2014 இரவு 8.45)
                            நிர்வாகத் திறமை   

   அழுகின்ற குழந்தையது தனைம றந்தே
       அடுத்தநொடி சிரித்துமகிழ் வதனைப் போல
  எழுகின்ற கோபத்தீ பரவா வண்ணம்
        இயல்பான மனநிலைக்குத் திரும்பி வந்தே
  அழகூட்டும் புன்சிரிப்பை முகத்தில் காட்டி
       அருகுள்ளோர் மனமகிழ நடப்போன் எங்கும்
  நுழைந்தெளிதில் வென்றிடுவான் நிருவா கத்தின்
       நுட்பங்கள் பலவுமவன் தேர்வான் தானே !     

(எழுதியது 23.1.2014 காலை 6.40 )                        
மே 1 சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் வழியாக மே 1 லாஸ் ஏஞ்சல்ஸ் வ.ந்து சேர்ந்தேன். 23.5.2014 வெள்ளியன்று மாலை சான் ட்டா கிளாரா சென்று 26,திங்கள் மாலை அங்கிருந்து புறப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தேன்.