புதன், 30 ஜூலை, 2014

கங்காதீஸ்வரர் கோயில்-2

ஆடலும் பாடலும் அரம்பையர் ஆட்டமும்
              ஆரவார இசையும்
        அடுத்தவர் வருகையை அறியாத ஓர்நிலை
                அவையினிற் பகீதரன்

பாடிமூ உலகையும் வலம்வரும் நாரதர்
               பரமனடி போற்றிவந்தார்
       பரிமள நறுமணம் வீசிடும் சபைதனில்
               பவ்ய மாகநுழைந்தார்

ஈடிலா நாட்டிய இசையினில் மறந்தவன்
            எழுந்து வணங்கவில்லை
     இதுபொறுக் காதநம் நாரத முனிவரும்
             ஏகமாய்ச் சபித்துவிட்டார்

தேடியே பகீரதன் கங்காத ரேசரின்
            திருவடியி லேவீழ்ந்த்தனன்
      திவ்யமாய் ஈசனும் சாபமது தீர்த்தருளித்
              திரும்பிநீ செல்கவென்றார்.

(9-8-2012 மாலை 6.45 மணி. கோயில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக