வியாழன், 31 ஜூலை, 2014

தைப்பூசம்-கந்தகோட்டம்

துய்ப்பதற் கொன்றில்லை இவ்வரிய பூமியில்
           தூயநல் எண்ணமின்றி
    தொடர்ந்திடும் வெவ்வினைகள்  மிரட்டி அதட்டிடும்
           தொந்தரவு பலசெய்திடும்

கைப்பொருள் இன்றியே கடைத்தெரு வில்சென்றால்
         கைகொட்டி நகைத்திடாரோ
    கட்டிய மனைவியும் பிள்ளையும் காசினைப்
         பெரிதெனக் கருதுமுலகம்

மெய்ப்பதம் காணவே மீண்டும் மீண்டுமென்
          முருகனே எனச்சொல்கிறேன்
   மேன்மையாய் அருணகிரி பட்டினத் தாரையும்
          ஆட்கொண்ட தெய்வம்நீயே

தைப்பூச நன்னாளில் கந்த கோட்டத்துள்
        தலைவநினைக் கண்டுகொண்டேன்
   தளர்ந்துடலும் வீழுமுன் தாங்கிப் பிடித்திடுக
        தருமமிகு கந்தவேளே!

(7-2-2012 காலை 8.35 மணி.கந்தகோட்டம், சென்னை)
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக