வியாழன், 31 ஜூலை, 2014

அணிதிகழும் வடிவுடை அம்மன்

அசைகின்ற தண்டையும் அஞ்செஞ் சிலம்புகள்
       ஆர்ப்பரித் திடுவோசையும்
    ஆணிப்பொன் நவமணிகள் அழகொளிர மெல்லிடையில்
        அணிதிகழும் ஒட்டியாணம்

ஒசிந்தவா ரிருகைகள் உயர்த்திடும் போதிலே
      ஒலிபெருகு வளைகளாட்டம்
  ஒளிவிடும் நவரத்ன மோதிரங் கள்விரலில்
       உறவாடும் அரவமாமே

இசையோடு நர்த்தனம் செய்கின்ற ஈசனுக்
        கேற்றதோள் அணிகலன்கள்
   இலங்கு கழுத்தினில் தரளவடம் செவிக்கணிகள்
          ஏற்றமணி மகுடத்துடன்

நிசியிலும் ஒளிவெள்ள மாணிக்க மூக்குத்தி
         நினதுபல அணிகளன்றோ
   நின்நினைவில் என்கனவில் வந்துநகை புரிகின்ற
         வடிவுடை அம்மையருள்வாய்!

(15-2-2012 மாலை 5.45 மணி. அலுவலகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக