வியாழன், 31 ஜூலை, 2014

கருணாம்பிகையே காப்பாய் (வடிவுடை அம்மன்)

தெருவிலே நின்றுதினம் பிச்சை எடுத்துண்ணும்
             திக்கற்றோர் மிகுந்துள்ளனர்
    தீராத பேராசை கொண்டோர் கடன்வாங்கித்
             திக்குமுக் காடுகின்றார்

திருவுடையோ னிடந்தனில் பெண்டாட்டி பிள்ளைகள்  
          தித்திப்பாய்ப்  பேசுகின்றார்
     தேதிஒன் றானதும் சம்பளப் பணம்தேடும்
         திரைநரை முதியோர்மனம்

பொருளிலார்க் கிவ்வுலக மில்லையென் றார்குறளில்
        புவியினிற் பொருந்துமென்றும்
  பொன்னும் மண்ணுமெந் நாளு மிலாதுவிலை
        விண்ணையே தொட்டதின்று

கருணாம்பி கையுந்தன் கண்ணசைவே  ஏழுலகும்
        காக்கின்ற சக்தியம்மா
      கவலைகள் வாராமல் என்னையும் காத்தருள்
          வடிவுடை அம்மைநீயே!

(பத்தி 3&4  19-1-2012  காலை 7.45 மணி.பத்தி1 &2 பிற்பகல் 12.15 அலுவலகம்)

(குறிப்பு: ஹலாய் மெமோன் திருமண மண்டபம்-மணமக்கள்;கருணாம்பிகை+செந்தில்நாதன்)
  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக